”கோப்புகளின் மீது முடிவெடுக்காமல் வைத்திருந்தது ஏன்?” - தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்முகநூல்
Published on

செய்தியாளர்: நிரஞ்சன் குமார்

செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள்

பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அபயா எஸ்.போகா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.

senthil balaji
senthil balajipt web

கோப்புகளின் மீது தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்கிறார்!

கடந்த முறை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த போது, செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு தமிழ்நாடு அரசு அளித்த கோப்புகளின் மீது தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்கிறார் என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது.

இதனை அடுத்து தமிழ்நாடு ஆளுநர் தரப்பு செய்த தாமதத்திற்கான காரணங்களை கேட்டு நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை செப்டம்பர் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம்
ராஜஸ்தான் | காவல்துறை தேர்வில் டாப் ரேங்க் எடுத்தவர்கள் மறுதேர்வில் ஃபெயில்.. பாயும் கைது நடவடிக்கை!

தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே தாமதம் செய்கிறது:

அதன்படி இன்றைய தினம் மீண்டும் வழக்கின் விசாரணை நடைபெற்ற போது, "செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை தமிழ்நாடு அரசு வேண்டும் என்று தாமதம் செய்கிறது. எனவே, நடுநிலையான அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறி ஒய்.பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

"அரசியல்வாதிகள் தொடர்புடைய அனைத்து வழக்குகளுமே சிக்கல் நிறைந்ததாகவே இருக்கின்றது. இவை அனைத்திற்கும் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது இயலாத காரியம் என சிரித்தபடியே நீதிபதிகள் கருத்து, ஆனால் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கு வழக்கத்திற்கு மாறானது" என மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தார்.

senthil balaji
senthil balajipt

வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து மேற்பார்வை செய்ய முடியும்:

'தினசரி வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பு கோரிக்கை வைத்தது. அப்போது அதை தங்களால் செய்ய இயலாது என்றும் வேண்டுமென்றால் வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து அவ்வப்போது அறிக்கைகளைப் பெற்று மேற்பார்வை செய்ய முடியும் என நீதிபதிகள் பதிலளித்தனர்.

தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தாங்கள் அனுப்பிய கோப்புகளின் மீது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாக தகவல் தெரிவித்தனர். அதை கேட்ட நீதிபதிகள், கடந்த ஜனவரி மாதமே கோப்புகள் அனுப்பப்படுகின்றது ஆனால் அதன் மீது ஏழு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தது தங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்
தமிழக வெற்றிக் கழக மாநாடு அனுமதி மனு - அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய தமிழ்நாடு காவல்துறை!

சிறப்பு நீதிபதி வழக்கின் நிலைமை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும்:

செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரங்களில் வழக்கை விரைவு படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விரும்பும் போது, அதற்கு முட்டுக்கட்டையாக தமிழ்நாடு அரசு செயல்படுவது ஏன்?. செந்தில் பாலாஜி தரப்பு வைக்க வேண்டிய வாதங்களை தமிழ்நாடு அரசு வைப்பது தான் இதில் சந்தேகத்தை கிளப்புகிறது என மனுதாரர் தரப்பு வாதம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளை கீழமை நீதிமன்றங்களில் விசாரணையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் எவாஷிங்டன் தனசேகர் என்பவர் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தனது பணியை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் வழக்கு விசாரணையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்துள்ள உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி, தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி வழக்கின் தற்போதைய நிலைமை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Governor RN Ravi
Governor RN RaviRaj Bhavan twitter
உச்ச நீதிமன்றம்
வாழை: “ஆயிரம் வாழைத்தார்களை இதயத்தில் ஏற்றிவிட்டது அந்தக் காட்சி” - நெகிழ்ந்த முதலமைச்சர்!

தமிழ்நாடு ஆளுநர், கோப்புகளின் மீது ஏழு மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது ஏன்?

மேலும், வழக்கு விசாரணையை நடத்துவதற்கு அனுமதி கோரி கொடுக்கப்பட்ட கோப்புகளின் மீது ஏழு மாதங்களாக தமிழ்நாடு ஆளுநர் ஏன் எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தார் என்றும் உத்தரவிலேயே நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். வழக்கின் விசாரணை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் தமிழ்நாடு அரசு நியமித்துள்ள அரசு வழக்கறிஞர் ஏற்கனவே தற்போது ஆளுங்கட்சியாக உள்ள கட்சியின் சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கின்றார். எனவே அவருக்கு மாற்றாக வேறு ஒரு நபரை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com