உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்.. சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன்.. ஆனாலும்!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்காலப் பிணை என்பது இந்த ஒரு வழக்கிற்கு மட்டும்தான் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் pt web
Published on

”தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபடும் சங்கர்” - தமிழ்நாடு அரசு வாதம்

யூட்யூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் அவரது தாயார் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “ஏற்கனவே அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்தது, அதைத் தவறாக பயன்படுத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டவர் சவுக்கு சங்கர். இவர் தொடர்ச்சியாக இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்” என தெரிவித்தார். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சவுக்கு சங்கர் அரசுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை லூத்ரா எடுத்துரைத்தார்.

 சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்pt web

தொடர்ந்து, சவுக்கு சங்கர் தாயார் தரப்பு, “வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என கேட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இது சாதாரண சிவில் வழக்கு கிடையாது; இது சட்டவிரோத தடுப்பு காவல் சட்டம் தொடர்பான வழக்கு. இரண்டு மாதங்களுக்கு மேலாக சவுக்கு சங்கர் ஏன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்” என தெரிவித்தனர்.

சவுக்கு சங்கர்
குஜராத் | சண்டிபுரா வைரஸ்-க்கு 4 வயது சிறுமி பலி - மேலும் 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

செந்தில் பாலாஜியை குறித்து சூசகம்

இதுதொடர்பாக பதில் அளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், “ஏற்கனவே நீதிபதிகள் குறித்தும் நீதிமன்றம் குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டிருக்கிறார். அவர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவராகவே அறியப்படுகிறார்” என பதில் கூறினார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்ட்விட்டர்

சவுக்கு சங்கர் தாயார் தரப்பு, “சவுக்கு சங்கருக்கு எதிராக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கை உடைந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று அலைக்கழிக்கின்றனர். தமிழக அமைச்சரவையில் இருந்த ஒருவர் குறித்து சங்கர் பேசியதாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தற்பொழுது அந்த அமைச்சர் பதவி விலகி தற்போது சிறையில் இருக்கிறார்” என செந்தில் பாலாஜி குறித்து மறைமுகமாக வாதத்தை முன்வைத்தனர்.

சவுக்கு சங்கர் தரப்பு, நீதித்துறை குறித்து எதுவும் தவறாக பேச மாட்டேன் என உறுதிமொழி அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நாங்கள் ஏன் அவ்வாறு உறுதிமொழி தரச் சொல்லப் போகிறோம். எங்களை பொறுத்தவரை உறுதிப்படுத்தப்படாத எந்த தகவலையும் பேசக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியமானது” என கூறினர்.

சவுக்கு சங்கர்
உத்தரகாண்ட்| கோயிலில் டிரம்ஸ் வாசிக்க மறுப்பு: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டே ஒதுக்கிய கொடூரம்!

”இரு மாதங்களாக சிறையில் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை” நீதிபதி

மேலும், “சவுக்கு சங்கர் விவகாரத்தை உயர்நீதிமன்றம் கால வரிசைப்படி விசாரிக்க முடிவுசெய்தது சரியானதாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை” என நீதிபதிகள் கூறினர்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்pt web

அவர் கோடை விடுமுறையில் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஜூலை 2ம் தேதி தான் மனுவை தாக்கல் செய்துள்ளார் என தமிழ்நாடு காவல்துறை தரப்பு சொன்னதற்கு, நீதிபதிகள், “இது என்ன வகையான வாதம்? ஒரு மனிதனை காவலில் வைத்துவிட்டு அவன் ஏன் நீதிமன்றத்திற்கு வந்தான் என்று கேட்கிறீர்களா? அவர் வரவில்லை, ஏனென்றால் அவரால் முடியவில்லை. அவ்வளவு எளிமையானதுதான். சவுக்கு சங்கர் விவகாரத்தை உயர்நீதிமன்றம் கால வரிசைப்படி விசாரிக்க செய்த முடிவு சரியானதாகத் தெரியவில்லை.

மெரிட் அடிப்படையில் எதுவும் நடக்கவில்லை. மூன்றாவது நீதிபதி தகுதி அடிப்படையில் விசாரிக்கவில்லை. கருத்து வேறுபாடு இருந்தால், இடைக்கால நிவாரணம் குறித்து பரிசீலித்திருக்க வேண்டும். ஏன் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கூடாது?” என கேள்வி எழுப்பினர்.

சவுக்கு சங்கர்
விவாகரத்து பற்றிய இன்ஸ்டா பதிவு.. லைக் செய்த அபிஷேக் பச்சன்.. வதந்திகளுக்கு மறைமுக பதில்?

சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதை சென்னை உயர்நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதாகவும், அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் வரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்குவதாகவும், இந்த இடைக்கால பினை என்பது இந்த ஒரு வழக்கிற்கு மட்டும்தான் பொருந்தும் என்றும் வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்தால் இதை வைத்து அவர் வெளியே வர முடியாது” என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவது தொடர்பாக வரும் திங்கட்கிழமையோ அல்லது வேறொரு நாளிலோ தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பாக தமிழ்நாடு அரசு மற்றும் சவுக்கு சங்கர் தரப்பு முறையிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

மேலும் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடர்ந்து வழக்கை திரும்ப பெறுவதாக சவுக்கு சங்கரின் தாயார் தெரிவித்ததை எடுத்து அந்த வழக்கின் விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

சவுக்கு சங்கர்
வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுத்த GT MALL... அதிரடியாக மூட உத்தரவிட்ட கர்நாடக அரசு..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com