ரஜினியின் கருத்து ! எதிர்வினையாற்றியுள்ள தலைவர்கள்

ரஜினியின் கருத்து ! எதிர்வினையாற்றியுள்ள தலைவர்கள்
ரஜினியின் கருத்து ! எதிர்வினையாற்றியுள்ள தலைவர்கள்
Published on

எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகி விடக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சீமான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியுள்ளனர்.

எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறையும், கலவரமும் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தேசப்பாதுகாப்பையும் நாட்டு நலனையும் மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைய வன்முறைகள், மனதுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வன்முறை செய்தது யார் ? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? ஏற்கிறீர்களா ? எதிர்க்கிறீர்களா ? அதைச் சொல்லுங்கள் முதலில் என்று சீமான் தனது ட்விட்டரில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என்றும் சீமான் சாடியுள்ளார்.

திமுக இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ளார். போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வருமாறும் உதயநிதி ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அடையாளங்கள், உரிமைகள், உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும், மாணவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையும் ரஜினிக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் ஜோதிமணி சாடியுள்ளார். இந்தக் கருத்து, அச்சு அசல் பாஜக கருத்து என்றும், இன்னும் எதற்கிந்த முகமூடி என்றும் ரஜினிகாந்த்துக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com