தமிழகத்தில் இன்றும் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 7 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் -ஐ தாண்டி பதிவாகியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார்போல இன்று தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாகத் கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக திருச்சி 106.5, திருத்தணி 106.1, மதுரை விமான நிலையம் 104.7, வேலூர் 103.8, நாமக்கல் 103.1, சேலம் 102.3 ஆகிய இடங்களில் டிகிரி பாரஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.