நல்லடக்கம் செய்யப்பட்டது சுஜித்தின் உடல்!

நல்லடக்கம் செய்யப்பட்டது சுஜித்தின் உடல்!
நல்லடக்கம் செய்யப்பட்டது சுஜித்தின் உடல்!
Published on

சுஜித்தின் உடல் கல்லறைத்தோட்டத்தில்  அடக்கம் செய்யப்பட்டது

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான் . 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.

இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சுஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சுஜித்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் கல்லறைத்தோட்டத்தில் சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com