திருவண்ணாமலை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை தாக்கிய வசந்தமணி இன்று காலை உயிரிழந்தார்.
கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம், போளூருரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது பாமகவைச் சேர்ந்த வசந்தமணி என்பவர், எம்எல்ஏவின் காலில் விழுவது போன்று நடித்து அவரின் முகத்தில் கையால் குத்தியுள்ளார். இதையடுத்து தாக்குதல் நடத்திய வசந்தமணியை போளூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வசந்தமணிக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.