பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனார் சுதாகரன்

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனார் சுதாகரன்
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனார் சுதாகரன்
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்த சுதாகரன், தண்டனை முடிந்து இன்று விடுதலையானார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட 10கோடி ரூபாய் அபராதத்தை செலுத்திய பிறகு ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகினர். அபராதத்தை கட்ட தவறியதால் சுதாகரனுக்கு மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி கூடுதலாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2007ஆம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தான் சிறையில் இருந்ததாகவும், அதனை கணக்கில் கொண்டு தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென சுதாகரன் கோரிக்கை வைத்திருந்தார். அதனடிப்படையில் அவர் இன்று விடுதலையானார். அவருடைய உறவினர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர் உள்பட்ட பலர் மலர் தூவி அவரை வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com