டயர் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

டயர் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
டயர் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Published on

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் டயர் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான டயர் உற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த தொழிற்சாலையில் 4 சக்கரம் மற்றும் 2 சக்கர வாகனங்களுக்குத் தேவையான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய், பொன்னேரி ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

மேலும் தனியார் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் பீச்சி அடிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்களும் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com