ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவர்களுக்கு ஆறுதலை அளிக்கக் கூடியது எனக் கருதமுடியாது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக தாம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதில் தயாநிதி மாறன் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பே முக்கியமானது என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.