ராஜிவ் காந்தி படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான வழக்கில் 4 வாரத்தில் சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ராஜிவ் காந்தியை கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்காக, தான் பேட்டரி வாங்கி தரவில்லை என விசாரணை அதிகாரி கூறிய விஷயத்தை அடிப்படையாக கொண்டு அந்த பெல்ட் வெடிகுண்டு யாரால் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதுவரை தனது தண்டனையை நிறுத்திவைக்குமாறும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணையின் போது, வெடிகுண்டு தொடர்பாக வெளிநாடுகளில் விசாரணை நடைபெறும் என கடந்த ஆண்டே சிபிஐ கடிதம் அளித்திருந்த நிலையில், அதன் நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், வழக்கின் நிலை குறித்து 4 வாரத்தில் சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.