கனடா செல்வதற்கான தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ (வயது 22). பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு கடந்த 12 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.
துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீயின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி, மோதிவிட்டது. இதில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சுபஸ்ரீயின் கனடா செல்லும் கனவு கலைந்துவிட்டதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், அவர் கனடா செல்வதற்காக எழுதியிருந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த செய்தி உண்மையில் கண்களங்க வைக்கிறது. ஏனெனில் இன்று அவர் உயிருடன் இல்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால் கனடாவுக்கு பறந்திருப்பார்.