சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கல்லூரி மாணவரின் செவித்திறன் பாதிப்பு

சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கல்லூரி மாணவரின் செவித்திறன் பாதிப்பு
சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கல்லூரி மாணவரின் செவித்திறன் பாதிப்பு
Published on

கோவையில் காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக கல்லூரி மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையம் அருகே 3 மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். இதனைக் கண்ட காவல் உதவி ஆய்வாளர் மாதவன் அவர்களை தடுத்து நிறுத்தினார். எனவே இருசக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்த மாணவர்கள் முயற்சி செய்துள்ளனர். அந்த சமயத்தில் உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக இருசக்கர வாகனத்தில் பயணித்த மிதுன் என்ற மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் மாணவர் மிதுனின் காதில் ரத்தம் வழியத் தொடங்கியிருக்கிறது. எனவே உடடினயாக தொண்டாமுத்தூர் அரசு சுகாதார நிலையத்தில் மிதுன் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

3 பேர் பயணித்தது தவறு என்பதால் அபராதம் செலுத்தத் தயாராக இருந்தபோதும், காவல் உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதால் செவித்திறன் பாதிக்கப்பட்டதோடு, மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர் மிதுன் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் மாதவனிடம் கேட்டபோது, மாணவரின் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com