பறவைகளின் தாகத்தை தீர்க்கும் சார் ஆட்சியர் !

பறவைகளின் தாகத்தை தீர்க்கும் சார் ஆட்சியர் !
பறவைகளின் தாகத்தை தீர்க்கும் சார் ஆட்சியர் !
Published on

சுட்டெரிக்கும் கோடைக்கால வெயிலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் உயிரினங்களுக்கு தகர டப்பாவை தண்ணீர் இருக்கும் பாத்திரமாக மாற்றி பறவைகளின் தாகம் தீர்த்து வருகிறார் நெல்லை மாவட்ட சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்.

நெல்லை மாநகரின் விரிவாக்க பகுதியில் அரசால் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் இயற்கை மற்றும் பறவைகள் ஆர்வலராகவே வளர்ந்துள்ளார். கூண்டில் பறவைகளை அடைத்து வைத்து வளர்க்காமல், தனது வீட்டின் முன்பாக இருக்கும் சிறு பகுதியை தோட்டமாக அமைத்து அதை பறவைகள் வாழ்ந்திடும் வசிப்பிடமாக மாற்றி உள்ளார். கடுமையான வெப்பம் வீசும் இந்தக் கோடை காலத்தை எதிர்கொள்ளும் பறவைகள் போதிய குடிநீர் கிடைக்காமல் உயிரிழந்து விடுவதை அறிந்து, தனது வீட்டுத் தோட்டத்தில் பறவைகள் குடிப்பதற்காக, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் எண்ணெய் டின்களை பறவைகளின் குடிநீர் உபயோகத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைத்து வைத்திருக்கிறார் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்.

பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் செயல்படுத்திய இந்த யோசனை குறித்து கேட்டபோது " தாத்தா காலத்திலிருந்து விவசாயம் எங்கள் குடும்பத் தொழில். சிறு வயதிலேயே இயற்கை மற்றும் பறவைகள் மீது ஆர்வம் அதிகம் உண்டு. வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனரின் வழிகாட்டுதல் பறவைகள் மீதான ஆர்வத்தை மேலும் எனக்குள் அதிகப்படுத்தியது. பறவைகள் குறித்த தேடல் அதிகரிக்க அதிக விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். இந்தக் கோடைகாலத்தில் குடிநீருக்காக பறவையினங்கள் கஷ்டப்படுவதை காணமுடிந்தது. இது எனக்குள் ஏதோ ஒரு வகையில் இந்த பறவைகளுக்கு உதவ தூண்டியது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "ட்விட்டரில் வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் பதிவிட்டு இருந்த விபரத்தை பார்த்தேன். அதன்படி காடுகளுக்குள் பறவை இனங்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்திருந்தார் அந்த அடிப்படையில் நானும் அதனை இங்கு முயற்சிக்கலாம் என்று காலியான எண்ணெய் டப்பாவை பறவைகளுக்கான குடிநீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com