தமிழக எழுத்தாளர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன்

தமிழக எழுத்தாளர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன்
தமிழக எழுத்தாளர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன்
Published on
'பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன்.
டெல்லி பல்கலைக்கழக ஆங்கில இலக்கியப் பாடப்புத்தகத்திலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. கல்விக்குழுவைச் சேர்ந்த 15 பேரின் எதிர்ப்பையும் மீறி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படைப்புகள் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ''டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com