பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அரசு பணியிடங்களில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20% இடஒதுக்கீடு தரப்படுகிறது. இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, பிளஸ்-2 வையும் தமிழில் படித்திருந்தால்தான் அரசுப்பணியில் முன்னிரிமை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த சட்டதிருத்த மசோதாவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.