”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்

”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்
”இன்னொரு பொண்ணுக்கு அடிபட்டும் லோகேஸ்வரிய குதிக்க சொன்னார்” மாணவர்கள் குமுறல்
Published on

கல்லூரி மாணவி லோகேஸ்வரியின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், சம்பவத்தை பார்த்த மாணவர்கள் கூறும் தகவல்கள் நம்மை பதை பதைக்க வைக்கிறது. பேரிடர் பாதுகாப்பு என்ற முறையில் பயிற்சி வழங்கப்பட்ட போது லோகேஸ்வரியோடு சேர்த்து இன்னும் 3 மாணவிகளும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து மாணவர்களிடம் பேசிய போது ” பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது , கயிறு கட்டி மேலே ஏறுவதும் , இறங்குவதும் மட்டுமே பயிற்சி என சொல்லப்பட்டது ; லோகேஸ்வரி மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து மாணவர்களும் , மாணவிகளும் கூட அந்த பயிற்சியை மேற்கொண்டனர் , எல்லோருமே மேலே ஏறிவிட்டு இறங்கினார் , ஆனால் லோகேஸ்வரியும் இன்னும் இரண்டு பேரும் இறங்கும் நேரம் வந்த போது மழை வரத் தொடங்கியதால், அவர்களை குதிக்க சொன்னார் பயிற்சியாளர்” என்றனர்

மற்றொரு மாணவர் கூறும் போது “மாடியில் இருந்து குதிக்கச் சொன்னார் ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லாமல் அதனை மாணவிகள் செய்தனர் , லோகேஸ்வரிக்கு முன்னரே ஒரு மாணவி குதிக்கும் போது அவருக்கு சன் ஷேடில் மோதி லேசாக அடிபட்டது, அதனை பார்த்த லோகேஸ்வரி பயந்தார், குதிக்க மறுத்தார். ஆனால் பயிற்சியாளர் அதெல்லாம் ஒன்ரும் ஆகாது என கூறி அந்தப் பெண் பயந்த நிலையில் இருக்கும் போதே கட்டாயப்படுத்தி குதிக்க வைத்து விட்டார்” என்றார்

லோகேஸ்வரியின் தோழியான ஒரு மாணவி பேசும் போது “ யாரெல்லாம் பயிற்சிக்கு ரெடி என கேட்ட போது முதல் ஆளாக லோகேஸ்வரி பெயர் கொடுத்தார் ; இது மட்டுமல்ல , கல்லூரியில் எந்த நிகழ்வு நடந்தாலும் ஆர்வத்தோடு பங்கேற்கும் மாணவி லோகேஸ்வரி, இது ஒரு சாகமான நிகழ்வாக இருக்கும் என்று எங்களிடம் சொல்லிக் கொண்டுதான் அதை செய்யச் சென்றார், ஆனால் கயிற்றில் ஏறும் பயிற்சி என்று மட்டுமே சொல்லிவிட்டு திடீரென 2 வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னதால அவள் பயந்து விட்டாள்” என்று தெரிவித்தார். 

மாணவியின் பயத்தை பொருட்படுத்தாமலும், மற்றொரு மாணவிக்கு அடிபட்ட போதும் பயிற்சியை கவனத்தோடு மேற்கொள்ளாததே காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் லோகேஸ்வரி பயந்த போது யாரும் அதனை தடுக்கவில்லை, அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்ததால் இன்று ஒரு உயிர் பலி ஆகி இருக்கிறது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com