மதுரை புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் நேற்று புத்தக கண்காட்சி தொடங்கியது. இதையடுத்து அங்கு சென்ற பள்ளி மாணவ, மாணவிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, பக்திப்பாடல்கள் ஒலிபரப்பட்ட நிலையில், திடீரென மேடைக்கு கீழே அமர்ந்திருந்த மாணவிகள் சாமியாட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல பலரும் நாற்காலிகளை தள்ளிவிட்டு சாமியாடினர். சில மாணவிகள் மயங்கி விழுந்த நிலையில், அவர்களுக்கு அருகிலிருந்த பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து அமரவைத்தனர். இதையடுத்து கலைநிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
புத்தக திருவிழாவில், பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அதில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.