சேலம் | "தலைமையாசிரியர் எங்களை தரக்குறைவாக பேசுகிறார்" - மாணவர்கள் பேசிய வீடியோ வைரல்!

தலைவாசல் அருகே மாணவ மாணவிகளை தலைமையாசிரியர் இழிவாக பேசுவதாக பள்ளி மாணவ மாணவிகள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Govt school
Govt schoolpt desk
Published on

செய்தியாளர்: R.ரவி

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் தலைமையாசிரியராக பணிபுரியும் திருமுருகவேல் என்பவர், மாணவ மாணவிகளை தகாத வார்த்தையில் பேசுவதாக மாணவ மாணவிகள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Students
Studentspt desk

அந்த வீடியோவில் பள்ளி தலைமையாசிரியர் தங்களை தகாத வார்த்தையில் பேசுவதாகவும், தலை, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்பதாகவும், கழுத்தைப் பிடித்து நெரிப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் திருமுருக வேலுவிடம் கேட்டபோது, யாரையும் நான் தரக்குறைவாக பேசவில்லை. குழந்தைகளிடம் யாராவது இப்படி பேசுவார்களா. வேண்டுமென்று என் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Govt school
நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவர்களை தாக்கி கைது செய்த இலங்கை கடற்படை

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கபீர் அவர்களிடம் கேட்டபோது, இந்த வீடியோ தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை முடிவில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com