கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் நரசிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்று இக்கல்லூரியில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல், மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் கீழே நின்றுள்ளனர். அப்போது கீழே நோக்கி விழுந்த மாணவி சன்ஷேடில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்ட மாணவி எதிர்பாராதவிதமாக இறந்துள்ளது மாணவ- மாணவியர்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.