சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் மீண்டும் தற்கொலை முயற்சி

சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் மீண்டும் தற்கொலை முயற்சி
சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் மீண்டும் தற்கொலை முயற்சி
Published on
சென்னை ஐஐடியில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில்  முதுநிலை ஆராய்ச்சி படிப்பை படித்து வரும் ஸ்டீபன் சன்னி  என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஆராய்ச்சி படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதே நேரத்தில் மற்றொரு மாணவர் வீரேஸ் சரியாக படிக்க முடியாத காரணத்தினால் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள்  குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.  மாணவர்கள் தற்கொலை செய்தது கொண்டது தொடர்ந்து ஐஐடி முன்பாக 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இது போல் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொள்வது மனவருத்தத்தை அளிக்கிறது. இத்தகைய மாணவர்களுக்கு முறையாக கவுன்ஸிலிங் தேவை. இதற்கு நிர்வாகமும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முறையாக கவுன்ஸிலிங் தர ஆவண செய்தல் வேண்டும். 
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித ர்யிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.  அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தடுப்ப்ய் உதவி எண் 044-24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com