சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை - உணவுபாதுகாப்புத்துறை

சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தாலோ அல்லது கடையில் வைத்த விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
food
foodwatsapp video
Published on

சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தாலோ அல்லது கடையில் வைத்த விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தாலோ அல்லது கடையில் வைத்த விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும், உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின் படி கடையின் உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று உணவுபாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை :

பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் செய்து வந்து அந்த உணவை திறந்து சாப்பிடும் போது சில்வர் கவரை வைத்து உணவு பொட்டலம் கட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பிரியாணி கடைகளில் உடனடியாக பிரியாணியை விற்பனை செய்துவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உணவு பாதுகாப்புத் துறை மூலம் நடத்தப்பட்ட சோதனையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே அதனை மீறி, மீண்டும் இது போன்ற சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடையின் உரிமையாளர் மீது 5000 ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி அவரது கடை உரிமைத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின் படி கடையின் உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com