தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவையடுத்து இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி போராட்டம் நடத்திய 20 அமைப்புகளின் மீது பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து 20 அமைப்புகளிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.