உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்த பின்பே ஸ்டெர்லைட் ஆலை குறித்து நடவடிக்கை: ஆட்சியர்

உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்த பின்பே ஸ்டெர்லைட் ஆலை குறித்து நடவடிக்கை: ஆட்சியர்
உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்த பின்பே ஸ்டெர்லைட் ஆலை குறித்து நடவடிக்கை: ஆட்சியர்
Published on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்த பின்பே அதிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினர். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசும்போது, “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு தாமிரம் உற்பத்தி செய்யும் அலகினை எக்காரணம் கொண்டும் இயக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை வளாகத்தினுள் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி பகுதி மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிப்பதற்கு குழு அமைக்கவும், மேற்பார்வைக் குழு அமைக்கவும், தயிழ்நாடு மின்சார வாரியதத்தின் மூலம் மின்சார இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்த பின்பே அதிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இவை அனைத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, “ஸ்டெர்லைட் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பு குறித்து எதிர்ப்பாளர்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளிக்கப்படும். எனவே எதிர்ப்பாளர்கள் பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபடுவதை விட்டு சட்டரீதியாக அணுகி தீர்வுகாண முயற்சிக்கலாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com