பசுமை கணபதி - களிமண்ணில் விதைகள் வைத்து சிலைகள் தயாரிப்பு

பசுமை கணபதி - களிமண்ணில் விதைகள் வைத்து சிலைகள் தயாரிப்பு
பசுமை கணபதி - களிமண்ணில் விதைகள் வைத்து சிலைகள் தயாரிப்பு
Published on

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சூற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான சிலைகளை தயாரிக்கும் பணியில் கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயனக் கலவை இல்லாமல் தயாரிக்கப்படும் அந்த சிலைகளின் மூலம் மரம், செடிகளை வளர்க்கவும் அவர்கள் உதவுகின்றனர்.

வரும் 25ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், ரசாயனங்களால் செய்யப்பட்ட சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால் அவை மாசுபடுகின்றன. 

இதனைத் தடுப்பதற்காக தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பசுமை கணபதி என்கிற பெயரில் களிமண்ணால் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். நகர மக்கள் வீட்டில் சிலைகளை கரைக்கும்போது அவை செடியாக வளர்வதற்காக தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை அவற்றில் வைத்து தயாரிக்கின்றனர். குளங்களில் கரைக்கப்படும் சிலைகளில், மக்காச்சோளம், கோதுமைகள் உள்ளிட்டவற்றை வைத்து மீன்களுக்கு உணவளிக்கும் வகையில் தயாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com