ஈரோட்டில் திருடுப்போனதாக சொல்லப்பட்ட சிலைகள் கோயில்களிலேயே இருந்ததை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்
கண்டுபிடித்தனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள இராசாசுவாமி என்ற பழமையான கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த கோவிலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கோவிலின் அருகே புதியதாக கோயில் கட்டப்பட்டது. பழைய கோவிலில் வைக்கப்பட்டிருந்த கற்சிலைகள் திருடுப் போனதாக துரைசாமி, பென்தீபங்கன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக் காவல்துறையினர் கோயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழைய கோயில் அறையில் இருந்த நான்கு கற்சிலைகளை கண்டுபிடித்தனர். பின்னர் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் சோதனை செய்த போது, பழைய கோயிலில் இருந்த பத்து சிலைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்தனர்.