சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமுக்கு சிலை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சட்டப் பேரவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.