தேசிய கல்விக்கொள்கை
தேசிய கல்விக்கொள்கைமுகநூல்

தேசிய கல்விக்கொள்கை | மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் vs தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஸ்!

தேசிய கல்விக்கொள்கையில் ஏற்றுக்கொள்ளத்தக்க அம்சங்களை தமிழ்நாடு அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கேள்விகளுக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அவர்.
Published on

தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால், தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்தநிலையில், தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 4 கேள்விகளை முன் வைத்திருந்தார். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தாய்மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதை எதிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு...

பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், ”எங்களது கொள்கை தமிழை அடிப்படையாக கொண்ட உள்ளடக்கிய கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கிறது, அதேவேளையில் மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துகிறது. ” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதை எதிக்கிறீர்களா?

”போட்டிதேர்வுகளை தமிழில் நடத்த வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பாடப்புத்தகங்களையும், உள்ளடக்கங்களையும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் உருவாக்குவதை எதிர்க்கிறீர்களா?

பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தமிழில் வெளியிடுவதில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது. பொறியியல், மருத்துவம் சம்பந்தமான பாடங்கள் கூட, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

தேசிய கல்விக்கொள்கையின் எதிர்காலத்திற்கு உகந்த, அனைத்தையும் உள்ளடக்கிய கட்டமைப்பை எதிர்க்கிறீர்களா?

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் கொள்கைகள் ஏற்கனவே, முழுமையான மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை பிரதிபலிக்கின்றன. தேசிய கல்விக்கொள்கையிலுள்ள ஏற்கத்தக்க அம்சங்களை தமிழ்நாடு, தனது சொந்த திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

மும்மொழிக்கொள்கை போன்ற குறிப்பிட்ட அம்சங்களையே நாங்கள் எதிர்க்கிறோம். சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை விடுவிப்பதை தேசிய கல்விக்கொள்கையோடு தொடர்புபடுத்துவது, கல்வி மீதான மாநில அரசின் அரசியலமைப்பு சுயாட்சியை மீறுவதாகும். எனவே தேசிய கல்வி கொள்கை தொடர்பான நிபந்தனைகளின்றி, சமக்ர சிக்ஷா திட்ட நிதியை விடுவிக்க வேண்டும்.” என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com