மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்வு

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்வு
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்வு
Published on

தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மூன்றாமிடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

2021ஆம் ஆண்டிற்கான மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற துப்பாக்கி சுடும் போட்டி நேற்று 29.8.2021 ஆம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சரக டிஐஜி-கள். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள். மதுரை, பழனி, ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர துணை ஆணையர், காவல் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகளைக் கொண்டு சுடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு ஐபிஎஸ் அவர்கள் முதலிடத்தையும், தேஷ்முக் சேகர் ஐபிஎஸ் இரண்டாம் இடத்தையும், தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ரவி உமேஷ் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்

இதேபோல் மாநிலம் முழுவதும் மண்டல வாரிய அனைத்து மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்கும் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் மூன்று இடங்களை பெறும் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com