தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கைpt web

மாநில கல்வி கொள்கை - உயர்மட்ட குழு அளித்த பரிந்துரைகள் என்னென்ன?

தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கை தயாரித்த குழுவின் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் வழங்கினார்கள்
Published on

செய்தியாளர் - ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் பயிலும் மாணவ மாணவியர் 10ம் வகுப்பு பொது தேர்வுகளை எழுதும் வரை பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும். அதுவரை பிற வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக்கூடாது. உயர்கல்வி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட கூடாது. இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என மாநில கல்விக் கொள்கை குழுவினர் பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கை தயாரித்த குழுவின் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் வழங்கினார்கள். இது சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளதோடு பல்வேறு பரிந்துரைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதில், “போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஒரு மனநல ஆலோசகர், ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக் குழு அமைக்கலாம்.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை
சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு இனி செக் - டெக்னலாஜியுடன் களமிறங்கும் போலீஸ்

3, 5 ,8 வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தக்கூடாது. தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும், உயர்கல்வி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட கூடாது

முகநூல்

+1 பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. பிளஸ்1 மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்ற போதே படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்றக் கூடாது.

தேசிய புதிய கல்விக் கொள்கை முதலாம் ஆண்டு மட்டும் படித்துவிட்டு பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிட வேண்டும். இரண்டாம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழும் மூன்றாம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழும் வழங்கப்படும் என தேசிய கள்வி கொள்கை கூறுகின்றது. அதனை மாநில கல்வி கொள்கை நிராகரித்துள்ளது.

5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள்தான் முதல் வகுப்பில் சேர முடியும் என இருக்கிறது. ஆனால் இவ்விஷயத்தில் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையை தொடரும். அதாவது ஐந்து வயது பூர்த்தியானால் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம்

மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம். அனைத்து தாய் - குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் ECCD நிறுவனங்களையும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர RTE பரிந்துரைக்கிறது. "ஸ்போக்கன் இங்கிலீஷ்" தவிர "ஸ்போக்கன் தமிழ்" மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.

தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள் / முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள் / மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படுவதோடு, மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் பொது தேர்வுகளை எழுதும் வரை பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும். முந்தைய நிலைகளில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் இருக்கக்கூடாது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை
கணவன் மனைவிக்கு இடையே தகராறு - புத்திமதி சொன்ன விசிக நிர்வாகியை எரித்துக் கொல்ல முயற்சி

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு/தடகள நிகழ்வுகளில் கலந்துகொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி உறுதி செய்யப்பட வேண்டும்

அதேபோல், உயர்கல்வியில் (open book assessment) தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம். நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்” என்றெல்லாம் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வி கொள்கை குழுவினர் வழங்கிய பரிந்துரைகளின் மீது அரசு கருத்து கேட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை
போட்டி நிறுவனங்களே இல்லாமல் பண்ண ஜியோ... இப்போது திக்குமுக்காடும் இந்திய தொலைத்தொடர்புத் துறை!

பெண் கல்வி, மலைவாழ் குழந்தைகளுக்கான கல்வி, நலிந்த சமுகத்தினருக்கான கல்வி, சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கல்வி, தொழிற்கல்வி என ஒவ்வொரு தரப்பினரின் பார்வையில் அணுகி இந்த மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் கல்வி இருப்பதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்யும் பணியை மேற்கொண்ட இந்த குழு, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகளை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டங்களையும் நடத்தப்பட்டு இறுதி அறிக்கை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை
நாடு முழுவதும் இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com