விவசாயிகளுக்காக வரும் 25ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வணிகர் சங்கங்கள் ஆதரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமது கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின், பொதுமக்களுக்கு குடங்களை வழங்கினார். இதையடுத்து குடிநீர் நீரேற்று நிலையத்திற்குச் சென்று, நீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், குடிநீர்ப் பிரச்னையை தமிழக அரசு சரியான முறையில் கையாளவில்லை. ஆளும் அரசு விவசாயிகளுக்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தவில்லை என்பதாலேயே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நடத்த ஏற்பாடு செய்தோம். வரும் 22ஆம் தேதி மயிலாப்பூரில் அனைத்துக்கட்சி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார்.