இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்

இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்

இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்
Published on

பேனர் வைக்காததற்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், “பேனர்களால் விளம்பரம் வராது. மக்களுக்கு வெறுப்பு தான் வரும். இந்த விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது.

கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி தினமாக கொண்டாட வேண்டும். திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு 2020 ஜூன் 3 ஆம் தேதி காலை இலக்கிய விருதுகள் வழங்கப்படும். வெற்றி, தோல்வியை ஒன்றாக கருதி நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பது திமுக தான். ஒப்பந்தகள் மேற்கொண்ட நிறுவனங்களின் பெயரை ஏன் முதல்வர் வெளியிடவில்லை? இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கு தயார். மோடிக்கும், அமித்ஷாவுக்கு தாய்மொழி இந்தி அல்ல. பிறகு எதற்கு இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்? இது இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் இருக்கிறது.”  எனத் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com