மாத சம்பளத்தை பெற போராட்டத்தில் தள்ளுவதா? - ஸ்டாலின் கண்டனம் 

மாத சம்பளத்தை பெற போராட்டத்தில் தள்ளுவதா? - ஸ்டாலின் கண்டனம் 
மாத சம்பளத்தை பெற போராட்டத்தில் தள்ளுவதா? - ஸ்டாலின் கண்டனம் 
Published on

அதிமுக அரசு மாத சம்பளத்தை பெறுவதற்கு கூட போக்குவரத்து ஊழியர்களை திடீர் போராட்டத்தில் தள்ளி,மக்களை அவதிப்பட வைத்ததது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்கள் இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜூன் மாத ஊதியம் முழுவதும் இன்று மாலை 5 மணிக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு வாக்குறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

அரசு அறிவித்த படி பெரும்பாலான சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், அதிமுக அரசு மாத சம்பளத்தை பெறுவதற்கு கூட போக்குவரத்து ஊழியர்களை திடீர் போராட்டத்தில் தள்ளி,மக்களை அவதிப்பட வைத்ததது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், சம்பளம் கொடுக்க கூட தமிழக அரசிடம் பணம் இல்லை என்பது அதிமுக ஆட்சியின் நிர்வாக தோல்வியையும், நிதிமேலாண்மையில் தள்ளாடுவதையுமே காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com