லெட்டர் பேடு கட்சிகள் அப்படிதான் சொல்வார்கள்: யாரை சாடுகிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ?

லெட்டர் பேடு கட்சிகள் அப்படிதான் சொல்வார்கள்: யாரை சாடுகிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ?
லெட்டர் பேடு கட்சிகள் அப்படிதான் சொல்வார்கள்: யாரை சாடுகிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ?
Published on

லெட்டர் பேடு கட்சிகள் கூட நாங்க ஆதரவு கொடுத்தால் தான் யாரூம் ஆட்சிக்கு வர முடியும்  என்று கூறுவது வழக்கம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “மு.க.அழகிரி முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் பற்றி தான் பேசியுள்ளார். அதற்கு மு.க.ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் இதில் கருத்து சொல்ல முடியாது.

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தான் கூட்டணி கட்சிளுக்கு எவ்வளவு இடம் ஒதுக்கீடு என்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக தலைமை கழகம் முடிவு செய்யும். ஆட்சிக்கு கூட வரமுடியாது என்று தெரிந்த கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகள் கூட நாங்க ஆதரவு கொடுத்தால் தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும் என்று கூறுவார்கள். அது அவர்களின் உரிமை.

நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது வரை கூட்டணியில் தொடர்கிறது. தேர்தல் வரும் போது ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய பலம் குறித்து தொண்டர்களுக்கு கூறுவதற்காக சில கருத்துகளை கூற உரிமை இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்” என்றார்.

மேலும், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து பேசுகையில், “திரைத்துரையினரின் பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. கொரோனா காலத்தில் திரைத்துறையினர் வைத்த கோரிக்கைகளுக்கு இனங்க பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்தார். கொரோனா தமிழகத்தில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகர்கள் படம் வெளியாகிறது. 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கு திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com