7 பேர் விடுதலை விவகாரம்: முதல்வருடன் வரத் திமுக தயார் - ஸ்டாலின்

7 பேர் விடுதலை விவகாரம்: முதல்வருடன் வரத் திமுக தயார் - ஸ்டாலின்
7 பேர் விடுதலை விவகாரம்: முதல்வருடன் வரத் திமுக தயார் - ஸ்டாலின்
Published on

7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரை சந்திக்க முதல்வர் சென்றால் திமுக எம்.பிக்கள் உடன் வரத் தயார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 சட்டமன்ற தேர்தல் வருகிற நேரத்தில்தான் இந்த 7 பேரின் விடுதலை குறித்து முதல்வருக்கு நினைவு வந்திருக்கிறது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதியே தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்து தனக்கு அதிகாரமில்லை எனக் கூறிய பிறகு ஜனவரி 29 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து 7 பேரையும் விடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக முதல்வர் கூறியிருக்கிறார்.

இதைவிட நாகரீகமே இல்லாத அரசியல் நாடகம் இருக்க முடியுமா? விடுதலை தொடர்பான கோப்பே ஆளுநரிடம் இல்லாதபோது ஏன் முதலமைச்சர் அவரை சந்தித்தார்.

தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் வஞ்சக எண்ணமின்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேர் விடுதலையில் தேர்தலுக்கு தேர்தல் நாடகம் போடுவதை, வேடம் கட்டுவதை நிறுத்துங்கள். சிறையில் அடைந்த 8 ஆண்டுகளில் மரணதண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகம் போடுவதாக கூறுவதா?

7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரை சந்திக்க முதல்வர் சென்றால் திமுக எம்.பிக்கள் உடன் வரத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com