அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்
Published on

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 34 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருமணம், மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வூதிய நிலுவைத்தொகையான 24 கோடியே 9 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி.தயாநிதிமாறன், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com