“சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்” - ஸ்டாலின் காட்டம்

“சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்” - ஸ்டாலின் காட்டம்
“சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்” - ஸ்டாலின் காட்டம்
Published on

ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. அதேபோல், போராட்டத்தின் போது சில பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால், பதட்டமான சூழல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர். 

டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு மாணவர் அமைப்பினர் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் தடியடி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “தொடர் போராட்டங்களை கவனத்தில் கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தவர்களும் அதனை ஆதரித்தவர்களும் பதில் சொல்லியாக வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com