சி.வி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல் 

சி.வி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல் 
சி.வி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல் 
Published on

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்ததாக அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சட்டப்பேரவையில் ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதாக்களை 19 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதை ஏன் தமிழக அரசு மறைத்தது. இதை முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாம். தவறான தகவலை சொல்லியதற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் எனவும் அவ்வாறு உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாரா என கேள்வி எழுப்பினார். 

மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்துள்ளது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் சண்முகத்தின் பதிலில் திருப்தியில்லை எனக் கூறி திமுக வெளிநடப்பு செய்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com