பெரும்பாக்கம்: தரைத்தளத்தில் தேங்கிய வெள்ளம்.. கேள்விக்குறியாகும் 20 மாடி கட்டடத்தின் உறுதித் தன்மை?

சென்னை பெரும்பாக்கத்தில் 20 மாடி குடியிருப்பில் கார் நிறுத்தும் தரைத்தளம் முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் 20 மாடி குடியிருப்பில் கார் நிறுத்தும் தரைத்தளம் முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. லிஃப்ட், மோட்டார் போன்றவை இயங்காதததால் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் உள்ளன.

25 ஏக்கர் பரப்பில், 1500 வீடுகளுடன் 20 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். நான்காம் தேதி பெய்த கன மழையில் பெரும்பாக்கம் ஏரி முழுவதுமாக நிரம்பி அதிலிருந்து வெளியேறிய மழை நீர் இந்த அடுக்குமாடி குடியிருப்பை முழுவதுமாக சூழ்ந்தது. தற்போது தரைத்தளத்தில் மழை நீர் வடிந்தாலும் அடித்தள சுரங்கத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது மிகவும் சவால் நிறைந்த பணியாக உள்ளது.

அடித்தளத்தில் 100க்கும் மேற்பட்ட கார்களும், 40 இருசக்கர வாகனங்களும் சிக்கியுள்ளன. மேலும் 10 நாட்கள் மழை நீர் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் தேங்கி இருக்கும் பட்சத்தில் 20 மாடி கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சம் நிலவுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com