மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 17,727 பணியிடங்களை, ஒன்றிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரூப் B, C ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர், சீனியர் Statistical அதிகாரி பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதத்தில் 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 30 வயது நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24, 2024 - இரவு 11 மணி. அதில் திருத்தம் செய்ய, ஆகஸ்ட் 10 முதல் 11 வரை நேரம் தரப்பட்டுள்ளது. இதில் முதல் டயர் (Tier 1) செப் / அக்டோபர் 2024ல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியை பொறுத்து, கீழ்க்காணும் Pay Scale-ல் ஊதியம் வழங்கப்படும்.
# Pay Level-7 : ரூ. 44,900 - 1,42,400
# Pay Level-6 : ரூ. 35,400 - 1,12,400
# Pay Level-5: ரூ. 29,200 - 92,300
# Pay Level-4 : ரூ. 25,500 - 81, 100
மத்திய அரசின் என்னென்ன துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது என்ற விரிவான விவரங்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் மூலம் அறியலாம்:
தகுதியுள்ளவர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.