“முத்தமிழ் முருகன் மாநாடு போல் பல மாநாடுகளை நடத்த வேண்டும்” - இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான்

“தமிழக அரசு, முத்தமிழ் முருகன் மாநாடு போல் இன்னும் பல மாநாடுகளை நடத்தி தமிழர்களின் கலாசாரத்தை வளர்க்க வேண்டும்” என இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.
இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான்
இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான்pt desk
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர் கருப்பையா என்பவரின் இல்ல நிகழ்வில் இலங்கை ஆளுநரும் ஜல்லிக்கட்டு ஆர்வலருமான செந்தில் தொண்டைமான் கலந்து கொண்டார். அவருக்கு ஜல்லிக்கட்டு பேரவையினரும் ஆர்வலர்களும் செங்கோல் கொடுத்தும் மாலை அணிவித்தும் ஜல்லிக்கட்டு காளையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான்
இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான்pt desk

இதைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில்... “உள்நாட்டு அரசியலில் விமர்சனங்களோ கருத்துக்களோ நான் தெரிவிப்பது நாகரீகமாக இருக்காது. தமிழக அரசு முத்தமிழ் முருகன் மாநாடு போல் இன்னும் பல மாநாடுகளை நடத்த வேண்டும். அதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும்.

இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான்
வலியை மீறி அம்மாவுக்காக உடைந்துபேசிய சிறுவன்.. கல்வி கட்டணம் முதல் வீட்டு சாமான்கள் வரை உதவிய விஜய்!

சுற்றுலாத் துறையை வளர்ப்பதற்காக, விசா இல்லாமல் வந்து செல்லும் வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இலங்கை அரசு அந்நாட்டுக்குச் செல்ல விசா தேவை இல்லை எனக் கூறியுள்ளது. இதனால் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறி ஆகாது.

இனி வருடம் தோறும் இலங்கையில், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத் தலைவர் ஒண்டிராஜன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com