நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை, காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்று நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைபடகையும் அதில் இருந்த 22 மீனவர்களையும் கடந்த பிப்ரவரி 24ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் மார்ச் 10ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறைக்காவல் முடிந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் 22 மீனவர்கள் இன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று சிறைக்காவல் முடிந்து மீண்டும் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் மீனவர்கள் 22 பேரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து இலங்கை நீதிமன்ற நீதிபதி 22 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.