மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக கைகளில் சானிடைசர் தெளித்தற்கு 100 ரூபாய் கட்டணம் வசூல் செய்ததது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனைகாக கர்ப்பிணி ஒருவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை நிர்வாகம் மருத்துவரை ஆலோசனை செய்ததற்கு ரூ.300 கட்டணமும், கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக கைகளில் சானிடைசர் தெளித்தற்கு ரூ,100 கட்டணமாக வசூல் செய்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் சம்மந்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவர் கேட்டதற்கு தங்களுக்கு அளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 100 வசூலிக்க பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனை நுழைவாயிலில் பாதுகாவலர் கைகளில் சானிடைசர் தெளித்ததிற்கு தனியார் மருத்துவமனை 100 ரூபாய் கட்டணம் வசுலித்திருப்பது மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது “வசூல் செய்யப்பட்டது உண்மைதான் எனவும் ஆனால் தற்போது அவ்வாறு கட்டணம் ஏதும் வசூல் செய்யப்படவில்லை” என தெரிவித்தனர்.