ஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துதுறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி சென்னையிலிருந்து 3 நாட்கள் 6, 145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் இருந்து 280 பேருந்துகளும் கோவையில் இருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை முடிந்த பிறகு அக்டோபர் 8 முதல் 9 ஆம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்தச் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு மையங்கள் மாதாவரம், கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே. நகர் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு மையத்தில் தற்போது 10 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.