காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், 25 ஆம் நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார்.
அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பொதுமக்களுக்கான வரிசைகள் 5லிருந்து 7 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளன. இதனால், வழக்கமாக அத்திவரதரை காண 5 மணி நேரம் ஆகும் நிலையில், நேற்று 3 மணி நேரத்துக்குள் பக்தர்கள் தரிசித்தனர். மதியத்துக்கு மேல் கூட்டம் குறைவாக உள்ளதால், மாலை நேரத்தில் பக்தர்கள் வந்தால் எளிதாக அத்திவரதரை தரிசிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அத்திவரதர் வைபவத்திற்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் மூல வரை தரிசிப்பதற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.