பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழிமறித்து அவரது கார் சாவியை எடுத்து அவமானப்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பணியில் இருந்தவர் கண்ணன். இவர், சில தினங்களுக்கு முன்பு பெண் ஐபிஎஸ் அதிகாரி, ஒருவரை தன் காரில் ஏற்றிக்கொண்டு உயர் அதிகாரிகளை சந்திக்க சென்னை நோக்கி சென்றார். அப்போது அவரது காலை வழிமறித்த எஸ்பி.கண்ணன் கார் சாவியை எடுத்து அவமானப்படுத்தியதாக சிபிசிஐடி போலீசாரால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பாலியல் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட உயர் அதிகாரிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரிவு மற்றும் அனைத்திந்திய மகளிர் மாதர் சங்கம் சார்பிலும் அசரை கைது செய்யக் கோரியும், பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
இதையடுத்து இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் எஸ்பி.கண்ணன் கலந்து கொண்ட நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரியை மானபங்கம் படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், எஸ்பி கண்ணனுடன் சேர்ந்து பெண் எஸ்பி-யை வழிமறித்து நிறுத்தி உதவிய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் உளவுத்துறை போலீசார் தமிழ்வாணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சென்னை வணிகக் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக உள்துறை விசாரணை அறிக்கையின் அடிப்படையில்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.