ஆமை வேகத்தில் பரவும் தென்மேற்கு பருவமழை

ஆமை வேகத்தில் பரவும் தென்மேற்கு பருவமழை
ஆமை வேகத்தில் பரவும் தென்மேற்கு பருவமழை
Published on

வாயு புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெதுவாக பரவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக தென்‌மேற்கு பருவமழை தொடங்கிய 4 தினங்களுக்குள் தமிழகம் மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகள் வரை பருவமழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு இதுவ‌ரை 10 முதல் 15 சதவிகித பகுதிகளில் மட்டுமே தென்மேற்கு பருவமழை பரவியிருப்‌பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 25 தேதிக்குள் தென்னிந்தியா, மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகள் முழுவதும் தென்மேற்கு பருவமழையால் பலன் பெற தொடங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டில் தமிழகம் மற்றும் கேரளாவின் ஒருசில பகுதிகள், தெற்கு கர்நாடகா ஆகிய இடங்களில் தற்போதுதான் அதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறியுள்ளது. 
மெதுவாக தென்மேற்கு பருவமழை நகர்வதால் நாட்டில் 44 சதவிகிதம் குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com