தென்மேற்கு பருவமழை தீவிரம்: 4 வது ஆண்டாக நிரம்பும் பவானிசாகர் அணை

தென்மேற்கு பருவமழை தீவிரம்: 4 வது ஆண்டாக நிரம்பும் பவானிசாகர் அணை
தென்மேற்கு பருவமழை தீவிரம்: 4 வது ஆண்டாக நிரம்பும் பவானிசாகர் அணை
Published on

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகர் அணை 4 வது ஆண்டாக முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரிநீர் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானிசாகர் அணையில் கலக்கிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருப்பதால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயரம் இன்று மதியம் 100 அடியை எட்டிவிடும். காலை 7 மணி நிலவரப்படி நீர்மட்டம் 99.78 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியில் இருந்து 7280 கனஅடியாக குறைந்துள்ளது. நீர் வெளியேற்றம் 900 கனஅடியாகவும் நீர் இருப்பு 28.54 டிஎம்சியாக இருக்கிறது.

தற்போது 4 வது ஆண்டாக பவானிசாகர் அணை நிரம்புகிறது. அணையில் இருந்து வெள்ளநீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருப்பதால் 35 கிமீ தூரம் வரையுள்ள நீர்ப்பிடிப்பு பகுதி கடல் போல காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணை நிரம்புவதால் முன்கூட்டியே கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com