தமிழகத்தில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை? : தெற்கு ரயில்வே தகவல்

தமிழகத்தில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை? : தெற்கு ரயில்வே தகவல்
தமிழகத்தில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை? : தெற்கு ரயில்வே தகவல்
Published on

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை என தெற்கு ரயில்வே சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஊரடங்கிற்குப் பின்னரும் அது தொடர்கிறது.

இதனிடையே ஏப்ரல் 15 முதல் ரயில்கள் இயக்கப்படலாம் என்ற நோக்கில் பயணிகள் பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை என தெற்கு ரயில்வே சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com