நீலகிரி மலை ரயில் பாதையில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்போருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரியில் 125 ஆண்டு காலத்திற்கு மேலாக மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை உள்ள மலைப்பாதையில் ஓடும் ரயிலில் 70% சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு மலை ரயிலில் செல்லும் பயணிகள், பயணம் செய்யும்போது செல்பி எடுக்க முயற்சி மேற்கொள்வதும், நீராவி இன்ஜினில் தண்ணீர் நிரப்ப வனப்பகுதிகள் ரயில் நிறுத்தும்போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுப்பதையும் வாடிக்கையாக மேற்கொள்கின்றனர்.
இதனால் அசம்பாவித சம்பவம் நடக்க அதிக வாய்ப்பிருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மலை ரயிலில் ஜன்னல் வழியாக வெளியே வந்து செல்ஃபி எடுக்கும் முயன்றாலோ, மலை ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொண்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் தங்களது ஆட் சேபத்தை பதிவுசெய்துள்ளனர். மலை ரயில் முன் நின்று செல்ஃபி எடுத்து தங்களது நினைவலைளை பதிவுசெய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.