ஐஏஎஸ் தேர்வில் வென்ற பூரண சுந்தரிக்கு அதிநவீன ORCAM கருவி: திமுக எம்.எல்.ஏ. உதவி

ஐஏஎஸ் தேர்வில் வென்ற பூரண சுந்தரிக்கு அதிநவீன ORCAM கருவி: திமுக எம்.எல்.ஏ. உதவி
ஐஏஎஸ் தேர்வில் வென்ற பூரண சுந்தரிக்கு அதிநவீன  ORCAM கருவி:  திமுக எம்.எல்.ஏ. உதவி
Published on

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி பூரண சுந்தரிக்கு கண்பார்வைக்கு உதவும் அதிநவீன ஆர்கேம் கருவியினை வழங்க திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் ஏற்பாடு செய்துள்ளார்.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான பூரண சுந்தரி கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 286வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
சிறு வயதிலேயே கண்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பூரண சுந்தரியை  அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் பூரண சுந்தரியின் பார்வை திறனை மேம்படுத்தும் வகையில் கனடா நாட்டில் இருந்து ESIGHT என்ற அதிநவீன பரிசோதனை கண்ணாடியினை வரவழைத்துள்ளார் சரவணன். இதனையடுத்து மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு பூரணி அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பார்க்கும் அனைத்தையும் ஒலியாக கொண்டு செல்லும் ஆர்கேம் என்ற அதிநவீன கருவி பொருந்தப்பட்ட கண்ணாடியினை பொருத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அவர்களது ஆலோசனையைக் கேட்ட சரவணன் 3 லட்சம் மதிப்பிலான ORCAM கண்ணாடியினை தனது சொந்த செலவில் வழங்க முன்வந்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த அதி நவீன கண்ணாடியை வழங்க உள்ளதாக தெரிவித்த அவர் அத்துடன் அதிநவீன ORBIT READER என்ற எளிதாக படிக்க உதவும் BRAILLE கருவியினையும் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com